Wednesday, February 21, 2007

வாருங்கள், எல்லோரும் ஏமாற்றுவோம்!!!

உஙள் அலுவலகத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் 'சரியான நேரத்திற்கு வேலைக்கு வருகிறார்களா?' என்பதை தெரிந்து கொள்ள(ஒரு முதலாளியாக)ஆசைப்படுவீர்கள்தானே?!

ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உங்கள் ஊழியர்கள் போராட்டம் நடத்தினால்??? :(

அப்படி ஒரு சம்பவம் நம் அருகிலேயே அம்பத்தூர் நகராட்சியில் நடந்துள்ளது. "நாஙள் எப்போது வேலைக்கு வருகிறோம் என்று சொல்ல மாட்டோம்" என்று போராட்டம் நடத்தியுள்ளனர், அந்த மாநகராட்சியின் துப்புரவுப் பணியாளர்கள்.


வாருங்கள் விஷயம் என்னவென்று பார்ப்போம்....

"அம்பத்தூர் மாநகராட்சியின் 500க்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்களின் வருகையை பதிவு செய்ய 'கணிணி வருகை பதிவு முறை' அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி ஊழியர்கள் தங்கள் விரல் ரேகையை அலுவலக எந்திரத்தில் பதிவு செய்ய வேன்டும்(வருகை பதிவு). இந்த முறையில் ஒவ்வொரு ஊழியரின் வருகை நேரமும் பதிவாகிவிடும்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவ்வூழியர்கள் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்."

இதற்கு அவர்கள் கூறும் காரணம் "காலை, மதியம், பிற்பகல் மற்றும் மாலை என்று 4 முறை பதிவு செய்ய வேன்டியுள்ளது. தொலைவில் பணியில் இருப்பவர்களுக்கு இது மிகவும் கடினம்" என்பது.

இவர்கள் தங்கள் உபகரணங்களை எடுத்துச் செல்லவும் திரும்ப வைக்கவும் அலுவலகத்துக்கு வந்துதானே செல்வார்கள்?. எனவே 2 முறை பதிவு செய்தால் போதும் என்ற கோரிக்கையை முன் வைக்காமல், இந்த முறையே வேன்டாம் என்று போராடுவது, "நாங்கள் எப்போது வேன்டுமானாலும் வேலைக்கு வருவோம். நாஙள் தாமதமாக வருவதை கண்டுபிடிக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம்" என்று கூறுவது போல் உள்ளது.

இது "அவ்வளவு வேலையையும் முழுமையாக செய்ய வேன்டாம், இவ்வளவு செய்தால் 'போதும்' " என்ற நமது 'உயர்ந்த'(?) மனோநிலையை காட்டுகிறது.(மேல்மட்டத்திலிருந்து கடைசி மட்டம் வரை)

இவர்கள்தான் இன்னொரு இடத்தில் "அரசியல்வாதி எவனும் வேலையை ஒழுஙா செய்யவே மாட்டனுங்கய்யா" என்று அங்கலாய்ப்பார்கள்.


தமிழருவி மணியன் அவர்கள் தன் பேச்சில் பயன்படுத்தும் 'ஆட்சியாளர்களின் நீட்டுப்போக்கு' என்ற கருத்து கடைசி மட்டம் வரை பரவி விட்டது என்பதை இது உறுதிப்படுத்துகிறது. மேலும் சுஜாதவின்(எழுத்தாளர்) 'டெக்னாலஜியால் மட்டுமே இந்த மாதிரி விஷயங்களை கையாள முடியும்' என்ற நம்பிக்கையும் (எனது நம்பிக்கையும் கூட) தகர்ந்து விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.


ம்ம்ம்.. என்ன செய்ய!! வாருங்கள்


அரசியல்வாதிகள் மக்களை
பணக்கார போலி சாமியார்கள் பக்தர்களை
ஊழியர்கள் முதலாளிகளை
முதலாளிகள் அரசாங்கத்தை
நாம் நம்மையே

ஏமாற்றுவோம்...!

No comments: