Tuesday, August 25, 2009

டுவிதை=ட்விட்டர்+கவிதை: சில வரிகள்!

*****தனிமை*****


சாயங்காலம் - என்ற வார்த்தையை வைத்து
கவிதை வரையச் சொன்னாய்.
எந்த காலத்தில் பயன்படுத்துவது என யோசித்துக்கொண்டிருக்கிறேன்.
நீயோ இறந்தகாலத்தில்!

------

தனித்திருப்பதின் தத்துவம் பிரிந்திருப்பதில் உணரப்படுவதில்லை!
பிரிவு ஒரு துயரமே. தனிமை எப்போதும் தத்துவமே!
தத்துவங்கள் எப்போதும் புரிவதில்லை.

-----

மஞ்சள், வெள்ளை, நீல போர்டு பேருந்துகளில் புரிகின்றது
50 பைசா, 1 மற்றும் 2 ரூபாயின் மதிப்பு
உன் மதிப்போ
நீயில்லாத என்னுடைய கொடிய தனிமைகளில்.

-----


மேல இருக்கிற ஒவ்வொன்றையும் (கவிதைன்னு சொல்ல மனசு வரலீங்க) நகலெடுத்து 'ட்விட்டரில்' (Twitter) ஒட்டினீர்கள் என்றால் கச்சிதமாக பொருந்திக்கொள்ளும் (அதுக்காக தேவையில்லாம ஸ்பேஸ் தட்டக்கூடாது!). வார்த்தைகளுக்கு இடையே இடைவெளி, அடுத்த வரி என்று மட்டும் வைத்து சரியாக ட்விட்டரின் பெட்டிக்குள் பொருந்தும்படி கவிதை (!) எழுதுவதை வருங்கால சந்ததியினர் டுவிதை என அழைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அதனால் இப்போதே இந்த வார்த்தையை காப்பிரைட் வாங்கி வைத்துக்கொள்ளலாம் என இருக்கிறேன். :)

என்னை ட்விட்டரில் தொடர http://www.twitter.com/oorsutri

*****
செய்தி: ட்விட்டரில் பிரபலமாக இருக்கும் 'ட்வீட்' (Tweet) என்ற வார்த்தைக்கான ட்ரேட்மார்க் உரிமையை ட்விட்டருக்கு வழங்க அமெரிக்க 'பேடண்ன்ட் அண்டு ட்ரேட்மார்க் ஆபிஸ்' (US Patent and Trademark Office) மறுப்பு.

இந்த வார்த்தைக்கு நெருக்கமாக, மூன்று வார்த்தைகள் ஏற்கெனவே ட்ரேட்மார்க் தகுதி வாங்குவதற்காக காத்திருப்பு பட்டியலில் இருப்பதால், வார்த்தைக் குழப்பம் நேரலாம் என்பதுதான் காரணமாம்.

புகைப்படம்: நண்பன் 'பாலா' விடமிருந்து balasailendran@gmail.com.

20 comments:

Raju said...

போட்டோதான் டாப்பு.

யோ வொய்ஸ் (யோகா) said...

கனம் மேன்மை பொருந்திய டிவிதை வார்த்தையை கண்டறிந்த உங்களை நான் டிவிட்டரில் பின் தொடருகிறேன். எனது user name y_dran

கார்ல்ஸ்பெர்க் said...

//தனிமை எப்போதும் தத்துவமே!
தத்துவங்கள் எப்போதும் புரிவதில்லை//

-அட அடா.. பின்னிட்டீங்க!!!

வால்பையன் said...

”டுவிதை”
பேர் நல்லாருக்கு,
சரி டுவிட்டர்ன்னா என்னா தல?

SUFFIX said...

கவித்துவம்!! நல்லா இருக்கு, நீங்க கவிஞர் தானா? இல்லாட்டி கவிஞராவே மாறிட்டிங்களா? அந்த ட்விட்டர் பேட்டன்ட் பகரிவிற்க்கும் நன்றி.

ilangan said...
This comment has been removed by the author.
ilangan said...

ரொம்ப நன்றி உங்கள் பதிவையும் காணக்கிடைத்தது. பதிவர் சந்திப்பில் உங்களை காணமுடியவில்லை. முதன் முதலில் சினிமாவை விமர்சித்த ஒருவர் படத்தை பார்த்துவிட்டு மரங்களும் ஆட்டுக்குட்டியும் நல்லா நடித்திருக்கு என்றாராம். ஆனால் இப்ப சினிமாவின் வளர்ச்சி பிரமாண்டமானது அது போல நம்ம பதிவர் சந்திப்பும் வரணும் என்ற ஆதங்கத்தில தான் இப்பிடி ஒரு பதிவு

நட்புடன் ஜமால் said...

டுவிதை - அழகாயிருக்கு

தனிமை என்பதின் தத்துவம் - விளங்கவே விளங்காது தான் ...

ஊர்சுற்றி said...

டக்ளஸ் நன்றி..
நண்பன் எடுத்த புகைப்படம்.
நமக்கு அந்த கலை இன்னும் கைவசம் வரலீங்க.. :)

ஊர்சுற்றி said...

யோ வாய்ஸ்,
அந்த வார்த்தைக்கு இத்தனை மரியாதையா?!!!

கார்ல்ஸ்பெர்க் நன்றி.

வால்பையா நன்றி.
ட்விட்டர்னா,
140 எழுத்துக்குள்ளாக ஒரு குறுஞ்செய்தியை கூட்டமாக பார்க்கவோ தனி ஒரு நபருக்கோ எழுதுவது ட்விட்டுதல் எனப்படும். அந்த செய்தி 'ட்வீட்' எனப்படும்.

ஊர்சுற்றி said...

ஷஃபிக்ஸ்
நாமெல்லாம் கவிஞரா...!!!!

அப்படில்லாம் ஒண்ணும் கிடையாதுங்க... அப்பப்போ சும்மா கிறுக்கி வைக்கிறதுதான்.
நிறையா கிறுக்கி வச்சிருக்கேன்!

ilangan,
நன்றி. நான் இருப்பது தமிழ்நாட்டில்!
அந்தப் பக்கமெல்லாம் வர இன்னும் பலநாட்கள் ஆகும் என்று நினைக்கிறேன்.

ஊர்சுற்றி said...

நட்புடன் ஜமால்,

மிக்க நன்றி.

Unknown said...

// சாயங்காலம் - என்ற வார்த்தையை வைத்து
கவிதை வரையச் சொன்னாய். //

அட... போங்க தலைவரே..... சாயங்காலம் மின்னு சொன்ன அடுத்த நொடியே... மைண்டுல பல்ப்பு எரிய வேண்டாமா.... சரக்க பத்தி எழுதவேனுமின்னு ....!


ஒரு பாட்டில் " கல்யாணி " யை
பார்க்கச் சென்ற நான்
" மானிட்டர் " மல்லிகாவின் தங்கை
" கோட்டார் " கோகிலா
அழைத்த மறுநொடியே
என் சட்டை கல்லாவில் இருந்த
தனலட்சுமி இடமாறினால் .......!!







// மஞ்சள், வெள்ளை, நீல போர்டு பேருந்துகளில் புரிகின்றது
50 பைசா, 1 மற்றும் 2 ரூபாயின் மதிப்பு
உன் மதிப்போ
நீயில்லாத என்னுடைய கொடிய தனிமைகளில். //



உன் மதிப்போ
நீயில்லாத என்னுடைய கொடிய தனிமைகளில் " நானொரு புட்போர்டு ... "


இப்புடி முடுச்சிருக்கோனுமுங்க தலைவரே.....






எல்லா கவிதைகளும் ரொம்ப அருமையா இருக்குங்க தலைவரே....!!

அழகு... அருமை.....!!

ஊர்சுற்றி said...

நன்றி லவ்டேல் மேடி...

எனக்கு ஒரு சந்தேகம்,

இப்ப கொஞ்ச நாளா நீங்க எங்க பின்னூட்டமிட்டாலும் கொஞ்சம் வரிகளை சும்மா விட்டு விட்டே ஸ்பேஸ
குடுக்குறீங்களே! அது ஏன்?

சும்மா தமாஷுக்குதான் கேட்டேன், எதுனாச்சும் சீரியஸான மேட்டருன்னா வேணாம், வுட்டுடுங்க. :))))

Unknown said...

// இப்ப கொஞ்ச நாளா நீங்க எங்க பின்னூட்டமிட்டாலும் கொஞ்சம் வரிகளை சும்மா விட்டு விட்டே ஸ்பேஸ குடுக்குறீங்களே! அது ஏன்? //



அண்ணே.... நா எல்லோருக்குமே வரிக்கு வரி பின்னூட்டம் போடுவேன்.... , அப்போ கோர்வையா எழுதுனா.... ஏதோ கத மாதிரி இருக்கும் ... படிக்க பிடிக்காது....!! அதுனாலதான் ஒவ்வொரு வரிக்கும் கொஞ்சம் ஸ்பேஸ் விடுறேன் .... !! நான் எல்லோருக்கும் இப்படித்தான் எழுதுகிறேன்....!! உங்க மேல தனிப்பட்ட முறையில எந்த கொல வெறியும் இல்ல...... ஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......!!!



இங்ஙனம் ,

பலமுறை பலர் இந்த கேள்வியை கேட்டு ... அதற்க்கு பதிலை காப்பி , பேஸ்ட் செய்யத ,

லவ்டேல் மேடி .........

இது நம்ம ஆளு said...

வரிகளுக்கு அருமை ,தகவல்களும் அருமை .

ஊர்சுற்றி said...

லவ்டேல் மேடி...
விளக்கத்திற்கு நன்றி.. :)

இது நம்ம ஆளு...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ilangan said...

புதுசா ஒண்ணையுமா காணவில்லையே

Sanjai Gandhi said...

கவிதை அருமை.. ட்வீட் பற்றிய செய்திக்கு நன்றி.

ஊர்சுற்றி said...

நன்றி Ilangan மற்றும் SanjaiGandhi.

Ilangan இங்கிட்டு கொஞ்சம் வேலை அதிகமா இருக்கிறதால இந்தப் பக்கம் வர முடியவில்லை. :)